Wednesday, October 25, 2017

TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு!!


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர்
மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் TET அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது.
ஆரம்பத்தில் தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்கள் சற்றே தாமதமாக அமலாக்கம் செய்தன. அதன்படி கடந்த 15-11-2011 அன்று அரசாணை 181 உருவாக்கம் பெற்றது. ஆனால் அதை தமிழகம் முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் முறையாக செயல்படுத்த பல மாதங்கள் ஆனது.
இந்த இடைவெளியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET நிபந்தனைகள் அப்போது இல்லை.
ஆனால் அதன் பின்னர் அதே ஆசிரியர்கள் அனைவருக்கும் TNTET நிபந்தனைகள் பொருந்தும் எனவும், விரைவில் TETல் கட்டாயத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர இயலும் என்ற நிபந்தனைகளில் தள்ளப்பட்டனர்.
அன்றிலிருந்து இன்று வரை ஊதியம் மட்டுமே தரவும், மற்ற பணிப்பயன்கள் மறுக்கப்பட்ட நிலையிலும் இந்த நிபந்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக இருந்த இந்த வகை TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பல்வேறு வகைகளில் TETலிருந்து முழுவதும் விலக்கு கிடைத்தது.
தற்போது அரசாணை 181 & 90 போன்றவற்றைத் தாண்டி, சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு தரப்பட்ட சூழலில் 15-11-2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TET எழுத கட்டாயம் என்பதற்கு கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை கொடுத்து உத்தரவிட்டது.
ஆயினும் கடந்த மாதம் வெளிவந்த பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் அடிப்படையில் பார்க்கையில் 23-08-2010 பின்னர் பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் TET கட்டாயம் என்பது மீண்டும் வலியுறுத்தி உள்ளது தெளிவாகிறது.
இதனிடையே சுமார் 500 க்கும் மேற்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு மற்றும் பணிப்பாதுகாப்பு வேண்டி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடந்து உள்ளனர்.
24-10-17ல் வந்த இந்த வழக்குகளின் அடுத்த கட்ட வாதம் வரும் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குழப்பங்கள் நிகழும் இந்த வகை TNTET நிபந்தனை ஆசிரியர்களின் நீதிமன்ற வழக்குகளுக்கான தீர்வு அல்லது வாபஸ் சார்ந்த நெறிகள் விரைவில் வர வேண்டுமாகில் தமிழக அரசின் கல்வித் துறையின் கருணைப் பார்வைபட்டால் மட்டுமே யாருக்கும் பாதிப்பு இல்லாத நல்ல தீர்வு ஏற்படும் என்பதே உண்மை.
23-08-2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு TNTET லிருந்து முழு விலக்கு கொடுத்து பணிப் பாதுகாப்பு தந்து விரைந்து அரசாணை வெளிவிட்டு இந்த வழக்குகளை தீர்த்து வைக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் இன்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

Thursday, April 6, 2017

1,861 மையங்களில் 'TET' தேர்வு : கண்காணிப்பாளர் நியமனம் தீவிரம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது

Wednesday, February 22, 2017

அரவைக்கு செல்லும் 7 லட்சம் டி.இ.டி., விண்ணப்பம்

மாநிலத்தில் மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,)

Wednesday, September 14, 2016

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அடுத்த மாதம் 4–ந்தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம்(அக்டோபர்)4–ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது

Tuesday, September 13, 2016

ஜன., 22ல் 'நெட்' தேர்வு

உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Wednesday, September 7, 2016

வருகின்ற 13.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் விசாரணைக்கு வருகிறது..

வருகின்ற 13.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் விசாரணைக்கு வருகிறது..

Tuesday, June 7, 2016

TNTET:தகுதித்தேர்வு நிபந்தனை காத்திருக்கும் ஆசிரியர்கள்...


தமிழக அரசுப் பள்ளிகளில், 'டெட்' (ஆசிரியர் தகுதித்தேர்வு) நிபந்தனையுடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலஅவகாசம் நிறைவு பெறும் நிலையில், அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Monday, May 30, 2016

கேள்விக்குறியான டி.இ.டி., தேர்வு; குழப்பத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்

ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் சேர மீண்டும் அதிகரிக்கும் ஆர்வம்

கடந்த இரு கல்வியாண்டுகளை விட, ஆசிரியர் பட்டயப்பயிற்சி படிப்பில் சேர, மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. பயிற்சி முடிப்பவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்பதால், மாணவர்கள் இப்படிப்புக்கு ஆர்வம் காட்டி விண்ணப்பிக்க துவங்கியுள்ளனர்.

Friday, May 27, 2016

இரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை; மாணவர்கள் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால்பி.எட்.முடித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Friday, May 20, 2016

ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு விண்ணப்ப வினியோகம் துவக்கம்

கோவையில் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்களை, 40 பேர் நேற்று வாங்கிச்சென்றனர்.

Tuesday, May 10, 2016

ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு; விண்ணப்ப பதிவு துவக்கம்

ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில்தனித்தேர்வராக பங்கேற்பவர்களுக்குஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்யும் பணி,சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள டயட் மையத்தில் துவங்கியுள்ளது. 

Thursday, April 7, 2016

நெட் தேர்வு ஏப்ரல் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் நெட் தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

Tuesday, March 8, 2016

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஆசியர்கள் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.

Friday, February 26, 2016

16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Monday, February 15, 2016

TNTET:சட்ட மன்றக் கூட்டத் தொடருக்கு நம்பிக்கையுடன் காத்திருக்கும் டி.இ.டி நிபந்தனை ஆசிரியர்கள்.

TNTET:சட்ட மன்றக் கூட்டத் தொடருக்கு நம்பிக்கையுடன் காத்திருக்கும் டி.இ.டி நிபந்தனை ஆசிரியர்கள்.

Wednesday, January 27, 2016

5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்


5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல்

Sunday, January 24, 2016

மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் சார்பில், 'சிசெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு, நவ., 3ல் வெளியானது

Friday, January 22, 2016

ஆசிரியரா, பேராசிரியரா: பட்டதாரிகள் குழப்பம்

மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Monday, January 18, 2016

TNTET:தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் கோரும் ஆசிரியர்கள்: ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படாததால் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்